இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!

இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!   வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான்.   பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…

வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

  வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன்     ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.   தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது…

தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும்.  இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…

நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!

  மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.   அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…

காங்கிரசு, பாசக அல்லாத ஆட்சியே இலட்சியம்: செயலலிதா பேச்சு

ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர்  செயலலிதா பேசியதாவது: பாச கவின் “ஆ” அணிதான் அதிமுக என்றும், பாசகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. . எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் “ஆ” அணி இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி. காங்கிரசு, பாசக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் இலட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த இலட்சியம் நிறைவேற 40 மக்களவைத்…

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.    இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன…

காங்.உடன் கூட்டணி இல்லை – எதிர்பார்த்தவாறு கலைஞர் அறிவிப்பு

    சென்னை – இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில்  பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான மக்களின் உணர்வினை இதுவரை ஏற்காத தி.மு.க. தலைமை, சூழ்நிலையின் உந்துதலால்  –  பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இணங்க   உடன்படுவதுபோல் – இப்பொழுது…