தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் – தொடர்ச்சி) நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா? இனிய அன்பர்களே! தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரு பழ,நெடுமாறன் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி என்னிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அஃதாவது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடனிருப்பதாக அவர் சொல்வது உண்மைதானா? என்று கேட்கின்றனர். உண்மையா? என்று தெரியாது. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி என்பதுதான் என் விடை. பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச்சாவடைந்து விட்டார் என்று ஏற்கெனவே நான் சொல்லி வருகிறேன்….
பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!
பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்! கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த…
தமிழினப் படுகொலையும் ஐ.நா.வின் அணுகுமுறையும் – கருத்தரங்கம், சென்னை
தை 09, 2048 ஞாயிறு சனவரி 22, 2017 மாலை 3.00
இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்
இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…
காலம் அழைக்குதடா! -காசி ஆனந்தன்
காலம் அழைக்குதடா! மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும் தீனி சமைத்தவனே! – தமிழ் போனதடா சிறை போனதடா! அட பொங்கி எழுந்திடடா! காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை! பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி! ஏற்று தமிழ்க் கொடியே! முந்து தமிழ்மொழி நொந்து வதைபட இந்தி வலம் வரவோ? – இது நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு! வந்து களம் புகுவாய்! நாறு பிணக்களம் நூறு படித்தநம் வீறு மிகுந்த குலம் – பெறும் ஊறு துடைத்திடு மாறு புறப்படு!…
மாவீரர் நாள், அரியாங்குப்பம்
கார்த்திகை 11, 2046 / நவம்பர் 27, 2015 மாலை 5.00 திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி
கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச்…
தமிழனுக்கு யாவனுளன் ஈடு?
தமிழன் உடற்குருதி சூடு! தமிழன் தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு! இமயம் கடாரமெனும் இடம் பலவென்றவனலவோ தமிழனுக்கு யாவனுளன் ஈடு? தமிழன் தாங்கு புகழைத் தமிழா! பாடு! …உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா
நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.
செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்
கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும், இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….
தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்
தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்!