தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன. செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன் 27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி தலைமையில் விருது பெற்றவர்கள்: குரு.சம்பந்தம் – தொல்காப்பியர்…