அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு. ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை…
‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!
‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி! ‘ஆள்கடத்தல்-காணாமல் ஆக்கப்படுதல்’ நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு & திருமதி பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட மக்கள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர். இவர்களின் குடும்ப நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம்(20,000) உரூபாய் நிதியை, வவுனியா மாவட்டக்குடிமக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஆடி…
அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு: காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்: இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு. ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற…
அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
ஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland) கூட்டாக வலியுறுத்தல்! இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக்…