தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14
(தோழர் தியாகு எழுதுகிறார் 238 : உழவர் போராட்டம் வெல்க! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 14 என் பெயர் இமா (உ)லூரம்பம் நிகாம்பி. அகவை 72. நான் மெய்த்தி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் போரில் மெய்த்தி இனத்தைச் சேர்ந்த ஆண்கள் மீரா பைபி பெண்களை ஒரு கருவியாகக் கையாண்டு வருவது வெட்கக் கேடானது. மீரா பைபி குழுவை நிறுவிய பெண்களில் ஒருத்தி என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன். 2004ஆம் ஆண்டு மணிப்பூரில் அசாம் படைப் பிரிவினரின் காவலில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13
(தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12 தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை (13) புது தில்லி மகாவீர் வளாகத்தில் கிறித்துவ அரசுசாரா நிறுவனமாகிய ‘இவாஞ்செலிக்கல் பெலோசிப்பு ஆஃப் இந்தியா‘ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவர்களின் கருத்தரங்கக் கூடம் இடைக்காலத் தங்கல்முகாமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 9-10 குக்கிக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம். என் பெயர் (உ)ரோசலிந்து. குக்கி இனம். அகவை 58. மெய்த்திக் கூட்டம் எங்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய போது சமையலறையில் எரிவாயு உருளை வெடிக்கக் கண்டு அவர்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12
(தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11 தொடர்ச்சி) மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) கதை (12) என் பெயர் நான்சி தௌத்தாங்கு. அகவை 34. குக்கி இனப்பெண். நால்வரடங்கிய எங்கள் குடும்பம் வன்முறை வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்து காங்குபோக்குபியில் ஒரு துயர்தணிப்பு முகாமில் தஞ்சடைந்துள்ளது. மணிப்பூர் மாநிலமெங்கும் இது போன்ற பல ஏதிலியர் முகாம்கள் இருப்பதாக அறிகிறோம். இம்பாலிலிருந்து தப்பி இந்த முகாமுக்கு வரும் போது எங்கள் உடைமைகளில் மிகச் சிலவற்றை மட்டுமே எடுத்து வர முடிந்தது. நானும் என் கணவரும் வாழும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11
(தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) கதை (11) நாட்டைக் காத்தேன்! கட்டிய மனைவியைக் காக்க முடியாதவன் ஆனேன்! இந்த என் சொற்களை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்திய இராணுவத்தில் அசாம் படைப் பிரிவில் சுபேதாராகப் பணியாற்றினேன். கார்கில் போரில் நாட்டுக்காகப் போர் புரிந்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையிலும் இடம் பெற்றேன். மே 4ஆம் நாள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பாலியலாக மானபங்கம் செய்யப்பட்ட இரு…
தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10
(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 10 என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன். என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்….
தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9
(தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை 8 என் பெயர் (உ)ரோசி கிப்புகென். குக்கி இனம். அகவை 70. என் மகள் மேரி மெய்த்தி இனத்தவரான சேக்கப்பு சிங்கு என்பவரை மணந்து கொண்டாள். மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்குமான இன மோதலின் மையப் புள்ளியாக விளங்கிய சூரசந்த்துபூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறேன். குடும்பத்தில் மற்றவர்கள் உயிருக்கஞ்சி வெளியேறிப் போய் முகாம்களில் இருக்கின்றனர். யார் எங்கே…
தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6
(தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) காதை (6) என் பெயர் சோசுவா ஃகான்சிங்கு. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவி மீனா ஃகான்சிங்கு (அகவை 45) மெய்த்தி இனத்தைச் சேர்ந்த கிறித்தவப் பெண். எங்கள் ஏழு வயது மகன் தொன்சிங்கு ஃகான்சிங்கு. எங்கள் உறவினரான லிடியா (இ)லூரம்பம் (அகவை 37). அவரும் மெய்த்தி கிறித்தவர். நாங்கள் அனைவரும் இம்பாலில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ஆபத்து…