சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்
தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், ஆனி 26, 2047 (10.07.2016) அன்று தொல்காப்பியர் சிலையை நிறுவினோம். சித்திரை மாதச் சித்திரைக் கோள் நாள், முழுமதி நாள், தொல்காப்பியர் பிறந்த நாள் என்பர் புலவர். இந்த ஆண்டு, சித்திரை மாதச் சித்திரைக் கோள்நாளில், சித்திரை 27, 2048 (10.05.2017) புதன்கிழமை காலை 1000 மணிக்குக் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிதலுடன் நிகழ்ச்சி…
தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000
தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000 கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….
காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்
காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம் தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார். இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…
காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை திறப்பு விழா – நிகழ்ச்சிப் படங்கள்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] படங்கள் நன்றி : தினமணி இலாசர், பெங்களூர் மு.மீனாட்சி சுந்தரம், கருங்கல் கண்ணன், அகரம்
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு
ஆனி 26,2047/ சூலை 10, 2016 காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை குமரி மாவட்டம் பனம்பாரனார் நிலம்தரு திருவில் பாண்டியன் அதங்கோட்டாசான் ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை
தொல்காப்பியர் சிலை – எதுவும் சொல்ல வேண்டுமா?
தொல்காப்பியர் சிலை -உங்கள் கருத்து என்ன? தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை வார்ப்பாக்கத்திற்குச் செல்லக்கூடிய நிறைநிலையை எட்டியுள்ளது. இப்படங்களைப் பார்த்து மேற்கொண்டு செம்மையாக்கம் தேவை யெனின் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். சற்றுப் பெரிதாகக் காணச் சொடுக்கிப் பார்க்கவும் தொல்காப்பியர் சிலையமைப்புக்குழு
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது. புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…
நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்
குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம் தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை
வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!
வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…
தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்
குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!
தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்