போலி எண் தகட்டுடன் உலாவரும் ஈருருளிகள்!
போலி எண் தகட்டுடன் உலா வரும் இருசக்கர வாகனங்கள் – மோதலில் காயமடைந்தவர்கள் இழப்பீடு பெற முடியாமல் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் போலி எண் தகட்டுகளுடன் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உலாவருகின்றன. தேவதானப்பட்டிப் பகுதியில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடாகா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நிதித் தொழில், கட்டடம் கட்டும் தொழில், தோட்ட வேலைகள், முறுக்குத்தொழிற்சாலை போன்ற பணிகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் அப்பகுதியில் நிதியுதவி பெற்று வாகனங்களை வாங்கி இரண்டு தவணை அல்லது மூன்று தவணை கட்டிவிட்டு…