தோழர் தியாகு எழுதுகிறார் 213 :தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி

(தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”-தொடர்ச்சி) தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி இனிய அன்பர்களே! வரலாற்றில் சுவடு பதித்த பெருமக்களை வெறும் அறிவூற்றுகளாகப் பார்த்தலும் பார்க்கச் செய்தலும் போத மாட்டா. அவர்களைக் குருதியும் சதையுமாக அறிதலும் அறியச் செய்தலும் வேண்டும். காலம் நீண்டு கரைந்த பின் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போதும் கூட அவர்களின் அறிவுப் படைப்புகள் அல்லாத பொருண்மியப் படைப்புகள் அவர்களைக் கற்கப் பேருதவியாகும். அவ்வுலகியத்தில் ஆழ்ந்த சமயக் குருமார்களைப் பொறுத்த வரை அவர்களின் இவ்வுலகிய…

தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்!

(தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” – தொடர்ச்சி) நடந்தார் வாழி காலுடுவெல்! இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிச் செல்கிறார்:  “இவ்வாறு கிறித்து சமயம் பரவி வரும் பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பருவந்தவறிப் பெய்த பெருமழையால் பொருனையாறு கரைபுரண்டு எழுந்து பல சிற்றூர்களைப் பாழாக்கியது. ஆற்றுவெள்ளம் அடங்கிய பின்பு கொள்ளைக் காய்ச்சலென்னும் கொடிய நோய் விரைந்து பரவியது. வெள்ளத்தால் வீடிழந்து உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வருந்திய மக்கள் காய்ச்சலுக்கிரையாகிக் கழிந்தார்கள். இந்நோய் கிருத்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக்கணக்கான மாந்தரைச் சூறையாடினமையால்…

தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி) கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார். அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை…

தமிழ்நாடும் மொழியும் 44 : சீர்திருத்தம்

(தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – தொடர்ச்சி) சீர்திருத்தம் தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும்…