‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்
‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்! செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…
‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!
தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு: உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046 / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…
கவியரசு கண்ணதாசன் விழா – சென்னை(வாணி மஃகால் – தியாகராயநகர்)
ஆனி 06, 2046 சூன் 21, 2015 ஞாயிறு மாலை 6.00 கடந்த கால் நூற்றாண்டாக – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) கவியரசர் புகழ் பாடி வருகிறது. இவ்வாண்டும் அழைப்பிதழில் உள்ளவாறு விழா நடைபெற உள்ளது. கவியன்பர்களும் திரையிசை அன்பர்களும் நண்பர்களுடன் வருமாறு வேண்டுகின்றோம். கவிஞர் காவிரிமைந்தன் நிறுவனர் – பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் பம்மல், சென்னை 600 075 தற்போது – அபுதாபி – அமீரகம் 00971 50 2519693 00971 50 4497052 kaviri2015@gmail.com www.thamizhnadhi.com