தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்
தேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள் தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன. இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி விழுந்து பலர்…
தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தண்ணீர் தனியாருக்கு விற்பனை
தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில்…
தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகள் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தேனிப் பகுதியில் நிறம் மாறும் கிணறுகளினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் கிணறுகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறிவருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை, சருக்கரைத் தொழிற்சாலை, காழிலை(காப்பி)த்தொழிற்சாலை எனப் பல தொழிற்சாலைகளும் பாறைகளை உடைத்துத் தூசு எடுக்கும் தொழிற்சாலைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால் சாயத்தொழிற்சாலையின் கழிவு நீர், சருக்கரைத்தொழிற்சாலையின் கழிவு நீர், இரவு நேரங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ச் சுமையுந்துகளிலும் இழுபொறிகளின் மூலமும் எடுத்துச்செல்லப்பட்டுக் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுநீர்கள் …