தோழர் தியாகு எழுதுகிறார் 213 :தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”-தொடர்ச்சி) தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி இனிய அன்பர்களே! வரலாற்றில் சுவடு பதித்த பெருமக்களை வெறும் அறிவூற்றுகளாகப் பார்த்தலும் பார்க்கச் செய்தலும் போத மாட்டா. அவர்களைக் குருதியும் சதையுமாக அறிதலும் அறியச் செய்தலும் வேண்டும். காலம் நீண்டு கரைந்த பின் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போதும் கூட அவர்களின் அறிவுப் படைப்புகள் அல்லாத பொருண்மியப் படைப்புகள் அவர்களைக் கற்கப் பேருதவியாகும். அவ்வுலகியத்தில் ஆழ்ந்த சமயக் குருமார்களைப் பொறுத்த வரை அவர்களின் இவ்வுலகிய…
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது. திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172