அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக்கூடாது! தேர்வு அறிவிப்பைத் திருத்தி வெளியிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!   தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 2021 அட்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே நீக்கப்பட்டு இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க…