76. பெண்களை உயர்வாகக் கூறுவதும் 77. சூத்திரர்களை உயர்த்திக் கூறுவதும் சனாதனம் எனப் பொய் சொல்வதா? 78. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு என்று தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 தொடர்ச்சி) பெண்களை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவுபடுத்துவதே சனாதனம். பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதருமம் சித்தரிக்கிறது. பெண்களுக்குத் தனி அடையாளங்களையோ தன்விருப்பிலான (சுயேச்சையான) செயல்பாடுகளையோ மனு தருமம் மறுதலிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை. பெண்கள் பாவப் பிறப்புறுப்பில் பிறந்தவர்கள் என்கிறது கீதை. பெண், இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம் விருப்பப்படி இருக்கக்…
சனாதனம் பிராமணர்களை உயர்த்திச் சொல்வதாகச் சொல்வதைப் பொய் என்னும் பொய்யும் வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகச் சொல்லும் பித்தலாட்டமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை- இரவி; திருவமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ; சரிதானா? – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 31 – 32 சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (மனு 1. 94). மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே சீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (மனு , 1 : 99). பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும்,…
வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை – கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 16 : . ஆகமங்களின் தோற்றம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு வேதாந்தம் வேதத்தின் முடிந்த முடிவு வேதாந்தம். வைதீகக் கருமத்தின் முடிந்த முடிவு ஞானம். இறவாப் பெருநிலையை அடைவதற்குரிய மார்க்கம் அறிவுடைமை. “ அவனை அறிவதன் மூலமே, இந்நில உலகில், ஒருவன் இறவாப் பெரு நிலையை அடைகிறான். அவனை அடைவதற்கு இது தவிர்த்து வேறு வழி இல்லை “ (“தம் எவம் வித்வான் அமர்த பஃகவதி நான்யஃக பந்தா அயனாய வித்யதே என்கிறது சுருதி) ஆகம நெறியின்…
பாரதி, கீதையை உயர்த்திக் கூறும் அவலம்- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69 இன் தொடர்ச்சி)
தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது – இலக்குவனார் திருவள்ளுவன்
வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது அறநெறிகளைத் தொகுத்துத் தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும் துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் உதவுவது என்பது வேறு. உழைப்பின் பயனை அடுத்தவர் ஏய்த்துத் துய்க்க, நாம் ஏமாளியாய் அடிமையாய் இருப்பது என்பது வேறு. முன்னதைக் கைம்மாறு வேண்டா கடப்பாடாகத் திருவள்ளுவரும்…
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி