மாமூலனார் பாடல்கள் – 8 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) எ “தோழி! அவர் பெரும் பேரன்பினர்.” – தோழி. “பொருளில்லார் இவ்வுலகில் எவ்வித பயனும் அடைய முடியாது. ஆதலின் பொருள் தேடிவருகின்றேன்” என்று கூறிவிட்டுத் தலைவன் சென்றான். அவன் சென்று சில நாட்களே யாயினும், பல மாதங்கள் கழிந்து விட்டனபோல் தலைவிக்குத் தோன்றுகின்றது. தலைவி, தலைவன் பிரிவாற்றாது வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறுகின்றாள். தலைவி: தலைவர் சென்றுள்ள இடம் மிகக்கொடியது அல்லவா? தோழி: ஆம் மிகக் கொடியதுதான். பகலை உண்டு பண்ணுகின்ற ஞாயிறு இல்லையேல்,…