ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! – ஈ.வெ.இரா., குடியரசு
ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! தீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக் கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலைநாளைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். பொதுவாகத் தீபாவளி என்கின்ற சொல்லுக்கு விளக்கு வரிசை. அஃதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர். “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார். மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…
தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்
(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள்…
தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்
தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப்…
வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(16 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு? நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன? என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு. குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில்…