குதித்தெழுந்து வாருங்கள் ! – மெல்பேண் செயராமர்
குதித்தெழுந்து வாருங்கள் ! படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார் அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார் குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார் அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே ! குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும் அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார் பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார் எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு ! அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள் ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள் என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் ! கொலைகூடச் செய்திடுவார்…
அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்
அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார் ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும். ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…