(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 பெண்ணை உயர்த்து!  தன்மதிப்பும், தெய்வ உணர்வும் ஆண்களுக்கு மட்டுமே எனச் சிலர் அறியாமையால் எண்ணலாம். ‘தையல் சொல் கேளேல்’ என ஔவை சொன்ன சூழலைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை இழிவு செய்யக்கூடாது என்பதே பாரதியாரின் எண்ணம். பெண்களை ஆணுக்கு இணையாய் நாடெங்கும் பரப்பியதே அவரது புரட்சிப் பாக்கள்.         “தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ? தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை         வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணேயன்றோ?” (பாரதியார் கவிதைகள்…