கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி) பூங்கொடி அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்;அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்;அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140 நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறைசுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்,சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும் ‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண்கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;அப்பெரும் மடமை அகற்றுதல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : குருதி சிந்தினர்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல் -தொடர்ச்சி) பூங்கொடி குருதி சிந்தினர் தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக்கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர்கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்;தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர்சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, 115குருதி கண்டும் உறுதி குலைந்திலர்முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள்உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும்பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே! கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் 120தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர்சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்;சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ?குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்; சிறையகம் போலச் சிந்தனை…