வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்
வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது. சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும் 1 மணி நேரம் பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர். குறிப்பிட்ட…
சின்னஞ் சிறிய குருவி பார்! – தழல் தேன்மொழி
சின்னஞ் சிறிய குருவி பார்! சிலிர்த்துப் பறக்கும் அழகைப் பார்! கன்னங் கரிய குஞ்சுடன் களித்து மகிழும் அன்பைப் பார்! தென்னங் கீற்று ஊஞ்சலைத் தேடி யமரும் அறிவைப்பார்! புன்னை மரத்தில் கூட்டினைப் பொருந்தக் கட்டும் திறனைப்பார்! முன்றிலில் காய் நெல்லினை முனைந்து கொறிக்கும் முயற்சிபார்! சின்ன சின்ன கால்களால் சிலிர்க்க நடக்கும் விரைவைப் பார்! தன்னைத் தானே இயக்கியே தன்னின் குடும்பம் பேணுமே! உன்னை வளர்த்துக் கொள்ளவே உயர்ந்த கல்வி அளிக்குமே! விடுதலை யாய் வாழுமே, வீண் செயல்கள் இல்லையே! அடிமை வாழ்வில்…
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 31 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
( ஆனி 13, 2046 / சூன் 28, 2015 தொடர்ச்சி) – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 30 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 30 அங்கம் : அருண் மொழி, பூங்குயில் இடம் : பள்ளியறை நிலைமை : (பள்ளிகொள்ள வருகின்ற பூங்குயிலை துள்ளி மெல்ல அணைக்கின்றான்) பூங் : என்ன நீர் இன்று பொழுதுக்குள்ளே களைப்பாய் உள்ளீர் உழைத்ததனாலா? அரு : என்னடி! உண்ணல் உறக்கம் தவிர்த்தோர் தவிர வேறென்ன வேண்டும்? உழைப்பு நமக்கு! பூங் : வெல்வெட்டு மெத்தை பிரித்தே வைத்த மேல் விரிப்பட்டும் தொங்கவே செய்த நல்லதோர் தேக்கங்கட்டிலும் உண்டு! நல்மணம் பரப்பும் பொருள்களும் உண்டு பாலாடையாகப் படி நிறை…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம் : அன்பரசன், கவிஞர் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி : பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் : பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி : …
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 27 அங்கம் : அருண்மொழி, பூங்குயில் இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண் : பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங் : முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண் : ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 17– ஆ.வெ.முல்லை நிலவழகன்
(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி) காட்சி – 17 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : குருவிக்கூடு நிலைமை : (தேர்தல் பற்றிய கருத்துரையைப் பேடைக்கு நேர்பட சிட்டு உரைக்கின்றது!) ஆண் : சின்னப்பேடே! சிரிப்பென்ன? என்ன! கொஞ்சம் சொல்லிவிடேன் பெண் : தேர்தல் தேர்தல் எனப் பலரோ வேர்வை வடியப் படித்திட்டார்! சோர்வே எதுவும் இல்லாது கூர்மையாய் சுவரில் எழுதிட்டார்! …