வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! – சி.இலக்குவனார்
வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல்போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும். கண்ணில்லாது வாழ முடியாததுபோல் கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெறமுடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றமாகும்….
திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக்கொண்டு அந்தணர் என்றும் ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும் இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி…
மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும்! பிறப்பால் உயர்வுதாழ்வு பேசுதல் பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வுபெறும் நெறி வெற்றி பெற்றிருக்குமேல், இன்று நாட்டில் பூசல்கள் தோன்றுமா? ஒழுக்கம் உடையாரை ஒதுக்கிப் புறக்கணிப்பதனால் அன்றோ இன்று எங்கு நோக்கினும் பூசற் களமாகக் காணப்படுகின்றது. மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், ஒழுக்கமுடையோர் உயர்ந்தோராகக் கருதப்பட்டு உயர்வாகப்…
வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்! – சி.இலக்குவனார்
வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார் வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும். அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதி்ரைகளைக் கொன்றனர். மக்கள் நலன்அடைய மாக்களைக் கொல்லுதல் அறமாகுமா? பேரருளாளர் வள்ளுவர்…
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார் மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். – பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர் : குறளமுதம் பக்கம் 524