குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த 2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து Thirukkural express அனைத்து மின்னிதழ் களுக்குமான…
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…