எழிலரசி அல்லது காதலின் வெற்றி 7 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல் வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும் கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப் பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து இழுத்துச் செல்லு மேழை களிடை 6 துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை. அவருடை தங்கை யவனுடை மையலில் வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன ஒருவரை யொருவ ருற்று நோக்கினர் கைகள் சென்று கைவாள் தொட்டன…