குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ மின்னூலாக்கம்   உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். “கவிதை “   முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.   மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.  ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.  சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை. கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி…