(தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ஒரு கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது: குடியுரிமைச் சட்டத்தில் குறையில்லை, திருத்தம்தான் மோசமா? மோதியரசு கொண்டுவந்த திருத்தம் மட்டுமல்ல, அதன் நோக்கமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் மோசமானவை எனபதில் ஐயமில்லை. எனவே நாமும் அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டோம். அதே போது இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உட்பட…