(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044.  குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,  வராதபடி கடிந்து விலக்குதல்   செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்      பெருக்கம், பெருமித நீர்த்து.        செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,        இல்லார் முன்னேற்றம் பெருமையது.   இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா      உவகையும், ஏதம் இறைக்கு.        கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,        ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.   தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…