உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா
தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா வைகாசி 01, 2047 – 21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் மரு. பி. நாராயணன், புலவர் உ. தண்டபாணி, திரு. ப.சிவராசு, முனைவர் ப.பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன்,…
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று! சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். –…