அத்தத்தா…… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி)
கொஞ்சு மொழி பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!! –முனைவர். ப. பானுமதி வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வரையறையின்நி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது அன்றாட நடைமுறையாகி விட்டது. “அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது” சங்கத் தாயின் மகிழ்ச்சிச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில்…