பெண்குழந்தைக்கொலைபோல்  முதியோர் கொலை தொடரும் பேரிடர்!   “வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய   போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும்…