கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’
கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ ‘குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது. தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் …
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ? உங்கள் படைப்புகளுக்காக உலக அளவில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். அதுகுறித்த உங்கள் கருத்து? இலண்டன் தமிழ் வானொலி, ஆத்திரேலிய தமிழ் வானொலி, குளோபல் தமிழ்த் தொலைக்காட்சி மையம், இலங்கை தீபம் தொலைக் காட்சி போன்ற ஊடகத்தினர் எனது படைப்புகள் குறித்து அறிமுகம் தந்தும் விருதுகள்பற்றிப் பேசியும் நேர்க்காணல் கண்டும்…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது? இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3 இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன் சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? …
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…
கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!
கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !! பேரன்புடையீர் வணக்கம். எதிர்வரும் ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்….
குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !
குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்! வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர் தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …
110 அகவை குவைத்து முதியவர் அல்அசுமில் இல்லம் ஓர் அருங்காட்சியகம்
குவைத்து நாட்டைச் சேர்ந்த முதியவர் அல் அசுமில் 110 அகவை கடந்தவர். பல நூறு ஆண்டுகள் தொன்மையான பல அரிய பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றார். இவரின் இல்லம் ஓர் அருங்காடசியகம் போல் காட்சி அளிக்கிறது. அவரை அவரது இல்லத்தில் கவிஞர் செங்கை நிலவன் நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார். அவர், மிகத் தெளிவாக ஆங்கிலம் பேசுகின்றார் எனவும் இச்சந்திப்பு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா
குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி…
வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்
குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம், அன்னையர் நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு, பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு, பொறியாளர் நடராசன், பொறியாளர் முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள் முன்னிலையேற்றார்கள். விழாவில் கவிஞர்கள், பாடகர்கள், அன்னையர் நாளைச் சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். விழாவில்…
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம்
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. செல்வி அனு, திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு இளங்கோவன், தொழிலதிபர் திரு சாமி, வானம்பாடிகள் உதவித் தலைவர் திரு அலெக்சு ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்ணிசைப் பாடல்களை, திரு பாண்டி, செந்தில்,இராமகிருட்டினன் ஆகியோரும் மெல்லிசைப்…