அறிவியல் வாசலில் தமிழ்  முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன்  வாய் மொழி. உடற் பிணி குறைய , மனக்குறை  மறைய சமூகம்  பற்றி , சரித்திரம் பற்றி சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ? வளம் உண்டு. நயம் உண்டு –  என்றாலும் அறிவியல் தேடலில் , தேவையில் தேயுமோ தமிழ் மொழி…