தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்? ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும்…
அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
அறம் காப்பார் அடுத்த முதல்வர்! அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே, முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும், அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற, அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்! ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும், காட்சி மாறாத கோலம் அங்கென்றும்! ஆற்று மணலென்று மக்களை எண்ணி, அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்! ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும், அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்! அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும், அரிய வாய்ப்பாக அமையும் இத்தேர்தல், அறத்தின் வழிநின்று ஆளும் ஒருவரை, அடுத்த முதல்வராய் ஆக்கலாம்…
கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு – ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு
கழிப்பறை கட்ட உரூ.3000 கையூட்டு ஊரவைக் கூட்டத்தில் பயனாளிகள் முறையீடு தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊரவை(கிராம சபை)க்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் அப்பாசு தலைமை தாங்கினார். இதே போல க.கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் வளையாபதி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் முத்துப்பாண்டி, எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் பழனியம்மாள், செயமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சங்கரலிங்கம், சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் சுப்புலெட்சுமி, அ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி, தே.வாடிப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்…
என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு
ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள் “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….