கொசுக்கடிக்குத் தீர்வு புகைமூட்டம்
கொசுக்கடிக்குப் பயந்து பழமைக்கு மாறிவரும் தேனிமாவட்ட மக்கள் தேனிமாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கொசுக்கடியிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மூட்டம் என்ற பெயரில் கொசுக்களை விரட்டியடிக்கும் முறையைக் கையாண்டனர். பழமையான மண்சட்டி, நொச்சி இலை, வேப்பிலை, தேங்காய் மட்டை, சிரட்டை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தீயினால் உருவாக்கப்பட்ட கங்குகளை வைத்து புகைமூட்டம் போடுவார்கள். இவ்வாறு புகை மூட்டம் போடப்பட்டு அதனைக் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தொழுவத்தில் வைப்பார்கள். இதனால் கால்நடைகள் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றப்படும். அதன்பின்னர் புதுமையாகி, கொசுவர்த்திச் சுருள், கொசுவை…