மங்கையரே வாருங்கள்! கண்ணகிபோல் சீறுங்கள்! கார்குழல் சுருட்டி அள்ளி முடித்து, குடும்பச் சுமைகளைக் கொஞ்சம் விடுத்து, கூர்மதி படைத்த பெண்கள் கூட்டம், கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! அறுவை சிகிச்சையில் பிள்ளையைப் பெற்று, ஆயுள் முழுவதும் அல்லல் உற்றிட, அரக்கத் தனியார் மருத்துவத் தொழிலே, அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, அனைவர்க்கும் மருத்துவச் சேவையை முழுதாய், அகிலத் தரத்தில் வழங்கும் அரசை, அச்சம் இன்றித் தேர்ந்து எடுங்கள்! அரசுப் பள்ளியின் தரத்தைத் தாழ்த்தி, கல்வியை வணிகம் ஆக்கும் அரசை, “பரத்தை” என்று பழித்தலும் தகுமே!…