கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன்
கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின் வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும் வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே. வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும் மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார் கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை அரசிலை எஃகம் தனியன் ஏந்தி வரும் கொல் என துயில் மறுத்து நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்….