புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )எவ்வகை ஓவியமாகவும்…