கருத்தரங்கம் 6 :இந்தியால் தமிழுக்குக் கேடு…! – க. அ.செல்வன்
வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும். ‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’…