சங்கரமூர்த்திபட்டியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு
சங்கரமூர்த்திபட்டிப் பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு தேவதானப்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி பகுதியில் மின்பொறி மூலம் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. முதலக்கம்பட்டி அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், வைகைப்புதூர் பகுதிகளில் வைகை ஆற்றில் இருந்து ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மின்பொறிகள் மூலம் தண்ணீரைத் திருடுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் உடந்தையுடன் ஆற்றின் அருகே மின்இணைப்பு பெற்றுத் தண்ணீரை மின்பொறி மூலம் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் தண்ணீரை நீரூர்திகள், உழுவைகளில் நிரப்பி உணவகங்கள், வீடுகள். விடுதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அரசு உழவர்களுக்கு விலையின்றி…