மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! பொதுவாக முற்போக்கு, சமய நல்லிணக்கம், பகுத்தறிவு என்ற கருத்தாக்கங்களில் உள்ளவர்கள், மத மாற்றத்தை ஏற்பவர்களாகவும் மதம் மாறியவர்களுக்கு மத மாற்றத்தால் சலுகை இழப்பு கூடாது என்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறிருக்க கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் முதல்வரின் தனித் தீர்மானம கொணரப்பட்டுள்ள நாளன்று அதற்கு எதிராக இந்தக் கட்டுரையா என எண்ணலாம். முதல்வரின் கருத்துக்கு எதிரான கட்டுரை என எண்ணுவதை விட, மதங்களால் பண்பாடு அழிவதைத்…
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக ஆட்சிகவிழும்; தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார். பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…
ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…
பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும் மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம். ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம், நாட்டை ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம். ஆனால்,…
தமிழக அரசின் வரிவிதிப்பில்லா மிகை வரவு நிதிநிலை அறிக்கை
திட்டச் செலவு 42 ஆயிரத்து 185 கோடி இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி அரசின் மதுவகை விற்பனை இலக்கு 2014-15 இல், (23 ஆயிரம் கோடி உரூபாயில் இருந்து)26 ஆயிரம் கோடி உரூபாயாக உயரும். தமிழக அரசின் 2013 – 2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 13.02.14 அன்று சட்ட மன்றத்தில் தமிழகநிதியமைச்சர் பன்னீர்செல்வம் முன்வைத்தார். அவர் தெரிவித்த அறிவிப்புகள் சில:- . திட்டச் செலவினம் 170 ஆயிரம் கோடியை மிஞ்சும். ஊர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கு…
தமிழகத்தை வஞ்சிக்கும் காங்.அரசு – ஆளுநர் உரை மூலம் தாக்கு!
தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து அரசின் குரலை ஒலிக்கும் ஆளுநர் உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன. “இலங்கையில் இனவெறிப் போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இதுவும், இலங்கை இனவெறிப்போரின் இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம் மாநிலத்தில் உணர்ச்சிகரமான சிக்கல்களாக உள்ளன. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப்…