தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்
தமிழே நீ வாழி! தூய தமிழே நீவாழி!தொன்மைத் தமிழே நீவாழி!பாயும் அமுதின் ஊற்றைப்போல்பழகும் தமிழே நீவாழி!ஆய நூல்கள் அணிகலனாய்அணிந்த தமிழே நீவாழி!தாயின் சிறந்தாய் நீவாழி!தங்கத் தமிழே நீவாழி! கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் வலைத்தமிழ்
குவிகம் இல்லம்: அளவளாவல் – இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன்
கார்த்திகை 23, 2049 ஞாயிறு 09.12.2018 பிற்பகல் 3.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல் இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் இதழாளர் இல்லம் அடைய
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்
(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா? வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அரசு பல்வேறான விருதுகளை…
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்
(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும்…
உ.வே.சா.-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 : சந்தர் சுப்பிரமணியன்
(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 நீங்கள் செயகாந்தன் தவிர வேறெந்தெந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்துள்ளீர்கள்? இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். அசோகமித்திரன் படைப்புகள், கலைஞரின் குறளோவியம், அப்புறம் அண்மையில் உ.வே.சா., அவர்களின் ‘என் சரிதம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ அரிய பணியாக இருக்கும் அல்லவா? ஆம்! அஃது ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்டது. சாகித்திய பேராயத்தின்(Sahithya Academy) வேண்டுகோளுக்கு இணங்க…
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்
(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா? ஆம்! எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன் அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த நூல். பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில் அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின்…
உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 – சந்தர் சுப்பிரமணியன்
உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 [தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் எடு பகுதி.] வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள்! அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா? நன்றி! இவ்விருது என்னுடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது….
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…
ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்
ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37
சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்
சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 36
விளையாட்டு – சந்தர் சுப்பிரமணியன்
விளையாட்டு பந்துருட்டி ஆடுகின்ற பாலகர்கள் ஓர்புறம்! பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம்! மூச்சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம்! பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம்! தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம்! விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம்! எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே! மட்டிலாத இன்பமுண்டு! வாட்டமென்ன? வாஉளே! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 35