வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ! – அட! வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ! விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ! – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ!   தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ! – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 34

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) : சந்தர் சுப்பிரமணியன்

உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்) அந்நாளில் சீருள் – பூஞ் செந்தேனைக் கொண்டோள் ஔவை! பண்பாடி ஈர்க்கும் – பூம் பெண்வேங்கைச் சொற்கோ ஔவை! தன்வாழ்வில் மீளும் – ஊழ் வென்றேழ்மை கொன்றோள் ஔவை! பண்வானின் மீனுன் – பூ வெண்மேன்மைப் பொற்போ ஔவை?  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை – சந்தர் சுப்பிரமணியன்

எண்ணிக்கை   ஒன்று – உலகின் சூரியன் ஒன்று! இரண்டு – இரவு பகலென் றிரண்டு! மூன்று – முத்தாய்த் தமிழ்காண் மூன்று! நான்கு – நாட்டில் பருவம் நான்கு! ஐந்து – அமைந்த புலன்கள் ஐந்து! ஆறு – அருசுவை வகைகள் ஆறு! ஏழு – இத்தரைப் பெருங்கடல் ஏழு! எட்டு – எதிர்படும் திசைகள் எட்டு! ஒன்பது – உடலின் வாசல் ஒன்பது! பத்து – பற்றிடும் விரல்கள் பத்து!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம்…

அகரப் பாடல் – சந்தர் சுப்பிரமணியன்

அகரப் பாடல்   அறிவைத் தீட்டு ஆணவம் ஓட்டு இறையைப் போற்று ஈகை ஆற்று உறவோடு இணை ஊக்கம் துணை எளிமை நாடு ஏழைமை கேடு ஐந்தின் பயன்காண் ஒன்றிப் பிழை ஓயாது உழை ஔவெனப் பழகு அஃதுடற்கு அழகு    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் :  பக்கம் 32

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்   தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது!   சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்!   வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…

வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணப் படம்   வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!   காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்!   கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 29…

கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 21 & 22   கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…

பொய் சொல்ல மாட்டேன்! -சந்தர் சுப்பிரமணியன்

பொய் சொல்ல மாட்டேன்!   பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! கையில் எதுவும் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்!   பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! மெய்யின் வழிதான் மேன்மை, எனவே பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்!   -சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 28    

குட்டி அணில்குட்டி! – சந்தர் சுப்பிரமணியன்

  குட்டி அணில்குட்டி!    கிளைதாவிக் குதிக்கின்றாய்! குட்டி அணில் குட்டி! – நீ தலைகீழேன் நடக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   முதுகின்மேல் மூன்றுவரி! குட்டி அணில் குட்டி! – நீ அதைஏனோ சுமக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   அடைமழையில் நனைகின்றாய்! குட்டி அணில் குட்டி! – உன் குடைவாலைப் பிடிக்கலையோ? குட்டி அணில் குட்டி!   தொடவேண்டும் நானுன்னை! குட்டி அணில் குட்டி! – தொட விடுவாயோ சொல்லெனக்கு! குட்டி அணில் குட்டி!   – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன் சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும் துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும் மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்! மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்! வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை! அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும் அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19) கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக் கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா? புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப் பொய்யகற்றப்…

கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்! அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும் பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும் பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு! ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17) விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின் விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்! மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?…