(தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் பொழில்வாய்ச்சி (பொள்ளாச்சி) கள்ளிப்பாளையம்புதூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வெள்ளி விழா நேற்று(10.04.23) இனிதே நடந்து முடிந்தது. இனிய நண்பர் சந்துருவை நீண்ட காலத்துக்குப் பிறகு பார்த்துப் பேசிக் கொண்டிருக்க இது நல்ல வாய்ப்பாயிற்று. அவருடனான நட்பு-தோழமை பற்றி நிறைய எழுத வேண்டும். பிறகு எழுதுகிறேன்.நேற்றைய நிகழ்வில் அவர் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைப்பட்டோர்…