சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! – அமைதி ஆனந்தம் மடல்

சமக்கிருதத்திற்கும் தாய்மொழி தமிழ்தான்! வல்லுநர் குழு அமைக்க வேண்டுகோள்.  ஆ. இரா.அமைதி ஆனந்தம் ஆவணிப்பூர் இராமசாமி <aa384485@gmail.com பெறுநர் இந்தியத் தலைமை அமைச்சர், இந்திய அரசு. படி : இந்தியக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், இந்திய அரசு. இந்திய அமைச்சர், மனித வள மேம்பாடு, இந்திய அரசு. இந்திய அமைச்சர்,  அறிவியல், தொழில்நுட்பம், இந்திய அரசு. இந்திய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு. முதலமைச்சர்கள், இந்தியா. ஐயா, உளறல் அல்ல; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை;…

இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?- வைகோ கண்டனம்

இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர்  அரசேற்பு அளிப்பதா? வைகோ கண்டனம்   இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த…

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! – பெ. மணியரசன்

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்!     சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் – என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள். இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி  மொழி; மற்ற மொழிகள் இந்தி  மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய்  இருக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாபு(முகர்சியின்) கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும்  நடுவணரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன….

தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்

தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.     வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…

உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

சமற்கிருத எதிர்ப்பு நாளைக் கொண்டாடுவோம்! உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும்!   உலகத்தாய்மொழி நாள் என்பது எந்த ஒரு மொழியையும் உலகத் தாய்மொழியாகக் குறிப்பது அன்று. மாறாக, அனைவரும் அவரவர் தாய்மொழியைக் கொண்டாட வேண்டும் என்பதே நோக்கம்.  1952இல் மேற்குப் பாக்கித்தான், கிழக்குப்பாக்கித்தான் மீது உருமொழியைத் திணித்தது. வங்காளமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகித்தானியர் அதை எதிர்த்துப் போராடினர். வங்க மொழிகாக்கும் போராட்டத்தில் வங்காளியர் பதினொருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொழிப்போரில் ஈடுபட்ட கிழக்குப்பாக்கித்தானின் வங்காளியர் இதை இனப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டமாகவும்…

சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை

  திராவிட மக்கள் பொருள்களுக்கும், கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச் சொற்களல்ல. ஆராய்ச்சியில் சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை என்று புலப்படுதல் கூடும். ந.சி. கந்தையா (பிள்ளை) : தமிழ் இந்தியா: பக்கம் – 39

மீட்டுருவாக்கம் செய்க! – தமிழண்ணல்

மீட்டுருவாக்கம் செய்க  வடமொழிப் பெயர்ப்படுத்தல்- அதாவது எப்பெயரையும் வடமொழிப் பெயராக மாற்றுதல் ஒரு ‘சமக்கிருதமயமாக்கும்’ முறையாகும். அங்கயற்கண்ணி என்பதை, மீனாட்சி என்னும் சொக்கரைச் சுந்தரர் என்னும் மாற்றினர். ‘தமிழகத்திலுள்ள அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அங்கு குடிகொண்டுள்ள இறைவன் இறைவியர்க்கும் நல்லநல்ல தமிழ்ப்பெயர்கள் வழங்கின. அவை அனைத்தும் பொருள் புரிந்தும் விளங்காமலும் வடமொழிப் பெயர்களாக்கப்பட்டன. இளையாத்தன்குடியை இளையாற்றங்குடி எனத் தவறாக எண்ணிக்கொண்டு, ‘விச்ராந்திபுரம்’ எனப் புராணம் எழுதியதை என்ன சொல்ல? ‘பாலை நிலையம்’ என்பதில் பாலுக்கு எவ்விதத் தொடர்புமில்லாதிருக்கவும், அதை ‘சீரத்தலம்’ எனப் பெயர்த்துச் ‘சில்ப’ சாத்திரமாக்கியதை…

சமசுகிருதமயமாக்குதலால் அடையாளம் இழந்தனர் – தமிழண்ணல்

  தமிழர்களுக்குச் சிறந்த வானநூற் புலமை இருந்தது. அதனால் கணியம் என்னும் சோதிடக் கலையிலும் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இன்று திருமணம் முதல் நீத்தார் கடன் ஈறாகத் தமிழர்தம் சடங்குகள் பலவும் தொன்றுதொட்டு இங்கு நடைபெற்று வந்தனவேயாம். எதையும் ‘சமசுகிருதமயமாக்கல்’ எனும் ஒரு சூழல், ஒரு பேரியக்கமாகவே சில நூற்றாண்டுகள் நடைபெற்றுள. இன்றைய ஆங்கில மோகம் போலச் சமசுகிருத மயமாக்குதலில், தமிழர்களே பேரார்வம் காட்டித் தங்கள் பண்பாட்டை அடையாளத்தைத் தாங்களே அழித்துக் கொண்டனர். தங்கள் சிற்பக் கலையை வடமொழியில் எழுதிவைத்து, அவை தமிழர்க்குக் கடன்பெற்றுக்…

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம். – மு.கதிரேசன்

சமக்கிருதத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடு மிகப்பலவாம்.    சமக்கிருத மொழியில் தமிழிற் போலத் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகள் இல்லை. “பவதி” என்னும் வினைமுற்று “இருக்கின்றான்” “இருக்கின்றாள்” “இருக்கின்றது” என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கேற்றவாறு பொருளுணர்த்தும். தமிழில் வினை முற்றுகளின் ஈறே திணை பால்களை உணர்த்தி நிற்கும. பால வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்களெல்லாம் ஆண்பாலாகவும், பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வறையறை இல்லை; மாறுபட்டு வரும், சொல்…