இயித்தாவில் (Jeddah) இசுலாமியச் சிறப்புத் தமிழ்மாநாடு
சவூதி அரேபியா இயித்தாவில் (Jeddah) சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14 வெள்ளிக்கிழமை அன்று இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில் சியாகி , கல்வியாளர் முசாகி இபன் இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி, உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன….