சாதிகுலம் எங்கட் கில்லை! – காகபுசுண்டர்
சாதி பேதஞ் சொல்லுவான் சுருண்டு போவான்! காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. -காகபுசுண்டர்