6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 5/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-4/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 5/6 இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’ (Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார். சேரர் தாய முறை சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 4/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-3/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 4/6 தமிழ்த் தொண்டு 1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம் மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 3/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-2/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 3/6 இந்தி எதிர்ப்புப் போர் 1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற இராச கோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 2/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-1/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 2/6 காங்கிரசு மாநாடுகள் எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் (இ)ரெளலட்டு சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத் துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 1/6

(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்- 1/6 1. வாழ்வு ‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், முனைவர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர்…

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் 4/4

(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 3/4 – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார் எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார். 1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் அறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத்…

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் ¾

(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 2/4 – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 3/4 இலக்கண ஆராய்ச்சி பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி’ என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை…

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4

(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா. தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 2/4 அடுத்து 1915இல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும். 1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில்…

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 1/4 பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள்…

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 கால நதியின் கதியதினில்கடவுள் ஆணை காண்பீரேல்ஞால மீது சுகமெல்லாம்நாளும் அடைந்து வாழ்வீரே! என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார். ‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார். கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும் கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின்…

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென–இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்–விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே–ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே–காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம். காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள்….

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…