தோழர் தியாகு எழுதுகிறார் 49: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி) அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா? “எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன். இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள்…