செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்” சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…
செஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள் சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு…
செஞ்சீனா சென்றுவந்தேன் 11 – பொறி.க.அருணபாரதி
(ஆவணி 8, 2045 /ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 11. சியான் – தமிழ்நாடு – வரலாற்று உறவு சங்கக் காலம் தொட்டே, சீனாவிற்கும் தமிழகத்திற்கும் உறவுகள் உண்டு. சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிலர் தமிழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் பண்பாடு – வரலாறு ஆகியவற்றைத் தங்களுடைய சீன மொழியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு, தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு,…
செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி
(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டுவந்துள்ளது. கி.பி. 618இலிருந்து 904 வரை (இ)டாங்குஅரசகுடும்பத்தினர், சங்கன்பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சிபுரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களைவிட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதெனப் பலவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் நகரப் பேருந்துக்காக நின்றோம். பேருந்துக்காகக் காத்திருப்போர் வரிசையாக…
செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது! பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…
செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 5. சீனப் பொருளியலின் “வளர்ச்சி” ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியைமட்டும் அதிகரிக்கும்நாடுதான், ‘வளர்ச்சி’ பெறும்நாடு என உலகமயப்பொருளியல் உருவாக்கியிருக்கும் கருத்து நிலையை, அப்படியே உள் வாங்கிக்கொண்டுவிட்டதுசீனப் பொதுவுடைமைக் கட்சி. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி அதன் உபரியைக் கொண்டு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டிய சீனப் “பொதுவுடைமை” அரசு, ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியிலும், அதன் ‘வளர்ச்சி’ விகிதத்திலும்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றது. உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, 1991ஆம்ஆண்டு, நான் வந்திறங்கியுள்ள சியான்நகரில்…
செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி
(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) 3. இந்தியப்பணத்தாளில் காந்தி … சீனப் பணத்தாளில் மாவோ! சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற…
செஞ்சீனா சென்றுவந்தேன் 2– பொறி.க.அருணபாரதி
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) 2. சியான் நகரம் பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும். மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல்,…
செஞ்சீனா சென்றுவந்தேன் – பொறி.க.அருணபாரதி
அறிமுகம் அலுவலகப் பணி காரணமாக, ஒரு மாத காலம் சீனா (மக்கள் சீனக் குடியரசு) செல்ல நேர்ந்தது. அங்கு நான் பெற்ற பயணஅறிவுகளின் தொகுப்பே இக்கட்டுரை! வட அமெரிக்காவில் நடைபெற வேண்டிய பல அலுவலக வேலைகளை அங்குள்ள நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்திலேயே செய்து முடிக்க, பல வட அமெரிக்கர்களை பணியிலமர்த்த வேண்டும். அவர்களுக்கு அதிகளவில் சம்பளமும் தர வேண்டும். எனவே, அப்பணிகளை குறைந்த கூலியில் முடித்துத் தருபவர்கள் எங்கிருக்கிறார்களோ, அவர்களை அமெரிக்காவிற்கு வெளியில் பணியிலமர்த்தி அப்பணிகளை முடித்துக் கொள்ள முடியும். இந்த…