பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா

பாடுவேன், ஊதுவேன்!   பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன்.   குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

இனிய தமிழ்மொழி – அழ.வள்ளியப்பா

   இனிய தமிழ்மொழி     தாய்சொல்லித் தந்த மொழி தாலாட்டில் கேட்ட மொழி சந்திரனை அழைத்த மொழி சாய்ந்தாடிக் கற்ற மொழி பாட்டிகதை சொன்ன மொழி பாடிஇன்பம் பெற்ற மொழி கூடிஆட உதவும் மொழி கூட்டுறவை வளர்க்கும் மொழி மனந்திறந்து பேசும் மொழி வாழ்க்கையிலே உதவும் மொழி எங்கள் தாய்மொழி-மிக இனிய தமிழ்மொழி. இனிய தமிழ்மொழி-அது எங்கள் தாய்மொழி. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

நிலா நிலா – அழ.வள்ளியப்பா

நிலா நிலா   ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம்.   எத்த னைநாள் பாடியும் ஏனோ நீயும் வரவில்லை. சத்தம் போட்டுப் பாடியும் சற்றும் நெருங்கி வரவில்லை. உன்னை விரும்பி அழைத்துமே ஓடி நீ வராததால் விண்க லத்தில் ஏறியே விரைவில் வருவோம் உன்னிடம் !   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும்…