ஓவியத்திலும் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர்!
“ஒவ்வு’ என்றால் ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போல இருப்பது என்பது பொருள். இதிலிருந்து “ஒப்பு, ஓவம், ஓவியம்’ எனச் சொற்கள் பிறந்து உள்ளன. கண்ணால் கண்ட பொருளை மனதில் நிறுத்திப் பின்னர் இத்ன உருவத்தைச் சுவரிலோ அல்லது பிற பொருள்களின் மீதோ தீட்டி மூலப்பொருட்களின் தன்மையை அதில் எதிரொளிக்கச் செய்வதே ஓவியமாகும். பழந்தமிழகத்தில் வண்ணம் தீட்டும் கோல்கள் “தூரிகை, துகிலிகை’ என இருவகைகளில் இருந்தன. வண்ணம் குழைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலகை வட்டிகை, மணிப்பலகை எனப்பட்டன. தூரிகை பாதிரிப்பூவைப் போல் இருந்தன…
பல்வகைச் சிறப்புடையது தமிழே!
பல்வகைச் சிறப்புடையது தமிழே! உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு