பகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக!

  பெரும்பாலான பொறியியற் கல்லூரிகள், பெற்றோர்களிடம் கொள்ளையடித்துத் தங்கள் வருவாயை உருவாக்கிச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதாகவே உள்ளன. பொறியியற் கல்லூரிகள் என்பன அதை நடத்துவோர் வசதிகளுக்காகவே யன்றி, மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவவோ கல்வி நலனுக்காகவோ அல்ல.   பொதுவாக எந்த நிறுவனமும் சொந்த நிதிநிலையில் கல்லூரியை நடத்துவதில்லை. பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பணத்தில்தான் அனைத்து நிறுவனமும் கல்லூரிகளை நடத்துகின்றன. ஆனால், மாணவர்களுக்குரியவசதிகளைச் செய்து தருவதில்லை.  ஆசிரியர்களுக்கும் விதிமுறைப்படியான முழு ஊதியத்தையும் தருவதில்லை. முறைப்படியான கல்வி வசதிகளை மாணவர்களுக்கு அளிக்க இயலாமலும் ஆசிரியர்களுக்கும்…

நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்

  திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில்  தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…